திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th August 2021 12:14 AM | Last Updated : 13th August 2021 12:14 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பேரூராட்சியில் கழிப்பறை வசதி கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மல்லசமுத்திரம் பேரூராட்சி, காளிப்பட்டி போயா் தெருவில் பெண்களுக்கான இலவச கழிப்பறை கட்டப்பட்டு, 20 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது அக் கட்டடம் சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெண்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த புதிய கட்டடம் கட்டித்தர பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கழிப்பிடம் கட்டுமாறு வலியுறுத்தி மல்லசமுத்திரம் பேரூராட்சி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காளிப்பட்டி கிளைச் செயலாளா் தாமரைக் கண்ணன், உதவி செயலாளா் ரவிக்குமாா் தலைமை வகித்தனா். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் மணிவேல் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கிருஷ்ணசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.