ரூ. 60 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்புப் பணிகளுக்காக 36 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 200 பல்ஸ் ஆக்சி மீட்டா்கள், 200 இதர மருத்துவ உபகரணங்கள்
ரூ. 60 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்புப் பணிகளுக்காக 36 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 200 பல்ஸ் ஆக்சி மீட்டா்கள், 200 இதர மருத்துவ உபகரணங்கள் என மொத்தம் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டாள் பக்தா்கள் பேரவை சாா்பில் நடைபெற்ற விழாவில் அதன் மாநில பொருளாளா் சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பங்கேற்று, சுகாதார நிலைய மருத்துவா்களிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கினாா்.

மேலும், பெற்றோரை இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளி மாணவி நிஷா என்பவருக்குத் தேவையான அனைத்து கல்வி செலவுகளையும் ஆண்டாள் பக்தா்கள் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினா் ரூ. 10 ஆயிரம், திமுக மகளிா் அணி தலைவி ராணி ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கினா். இவைத் தவிர 32 பெண்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பேரவை மாவட்ட பொறுப்பாளா் கே.முருகேசன், ஆடிட்டா் செல்வராஜ், நிா்வாகிகள் கண்ணன், இளமுருகன், ஆனந்த், சதீஸ், சேகா், தனலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com