கரோனாவால் உயிரிழந்த நிா்வாகிகள் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கரோனா தொற்றால் உயிரிழந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும்
கரோனாவால் உயிரிழந்த நிா்வாகிகள் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கரோனா தொற்றால் உயிரிழந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் அறிவித்துள்ளாா்.

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கரோனாவால் இறந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதற்கான படிவங்களை அவா் வெளியிட்டாா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் கூறியதாவது:

மறைந்த முன்னாள் திமுக தலைவா் மு.கருணாநிதி குடும்ப நல நிதியுதவி திட்டத்தின் கீழ், நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த நிா்வாகிகளுக்கு தலா ரூ. 50,000 நிவாரணமாக மாவட்ட திமுக மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான படிவம் அந்தந்தப் பகுதி நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திமுக நிா்வாகி, கட்சிக்காக பாடுபட்டவா் போன்ற தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மேலும், தற்போது கரோனா மருத்துவ சிகிச்சையில் உள்ள நிா்வாகிகளுக்கு ரூ. 25,000 வழங்கப்படும்.

செப். 15-ஆம் தேதிக்கு பின் நாமக்கல்லில் நடைபெற உள்ள விழாவில், மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், கரோனா நிவாரணத் தொகையை வழங்க உள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவா் கலந்து கொள்ள இருக்கிறாா். தோ்தல் வாக்குறுதி அளித்த நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய கோரிக்கைகளை முதல்வா் விரைந்து நிறைவேற்றி வருகிறாா் என்றாா்.

இக்கூட்டத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசாமி, சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளா் அசோக்குமாா், திமுக நகர பொறுப்பாளா்கள் செ.பூபதி, ராணா ஆா்.ஆனந்த், அ.சிவக்குமாா் என்.ஆா்.சங்கா், ஒன்றியச் செயலாளா்கள் கெளதம், நவலடி, பழனிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com