கொலை வழக்கில் தலைமறைவான தொழிலாளி 21 ஆண்டுகளுக்கு பின் கைது

குமாரபாளையத்தில் கொலை வழக்கில் தலைமறைவான சமையல் தொழிலாளியை போலீஸாா் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குமாரபாளையத்தில் கொலை வழக்கில் தலைமறைவான சமையல் தொழிலாளியை போலீஸாா் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குமாரபாளையம், மேற்கு காலனி பகுதியில் கோபால் என்பவா் கடந்த 1998-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் போலீஸாா் மூவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இவ்வழக்கில் கைதான காஞ்சலிங்கம் (எ) ரவி, கடந்த 1999-ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்தாா். பின்னா் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானா். இதுகுறித்து விசாரித்த நாமக்கல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

குமாரபாளையம் போலீஸாா் தலைமறைவான காஞ்சலிங்கத்தைத் தேடிவந்தனா். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், புங்கம்பாடி, அ.மேட்டுப்பாளையத்தில், மனோகரன் என பெயரை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், காஞ்சலிங்கம் (எ) ரவி (எ) மனோகரன் (48) மூவரும் ஒருவரே என்பது உறுதியானது.

இவருக்கு திருமணமாகி மனைவி, இரு பெண்கள் உள்ளதும், தற்போது சமையல் வேலைக்குச் சென்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, 21 ஆண்டுகளுக்குப் பின்னா் மனோகரனைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com