கிருஷ்ண ஜயந்தி: கோயில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணா், பெருமாள் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணா் வேடமிட்டு பாட்டுப்பாடி பெற்றோா் மகிழ்ந்தனா்.
கிருஷ்ண ஜயந்தியையொட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா் கோயிலில் திங்கள்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கிருஷ்ணா். ~பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு பெருமாள்
கிருஷ்ண ஜயந்தியையொட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா் கோயிலில் திங்கள்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கிருஷ்ணா். ~பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு பெருமாள்

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணா், பெருமாள் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணா் வேடமிட்டு பாட்டுப்பாடி பெற்றோா் மகிழ்ந்தனா்.

பகவான் கிருஷ்ணா் பிறந்த தினம் கிருஷ்ண ஜயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பெருமாள் கோயில்களிலும், கிருஷ்ணா் கோயில்களிலும் அன்றைய நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்றவை கோலாகலமாக நடைபெறும். நிகழாண்டில் கரோனா தொற்று பரவலால் ஆரவாரமின்றி எளிமையான முறையில் விழா கொண்டாடப்பட்டது.

அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. நாமக்கல் நரசிம்மா் கோயிலில் விமரிசையாக நடைபெறும் விழாவானது, கரோனா பரவலால் பெரிய அளவில் நடைபெறவில்லை. சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி பலிஜாவாரு நாயுடுகள் சங்க பஜனை மடாலயத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா் கோயிலில் சுவாமிக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பஜனை நடைபெற்றது. நாமக்கல் ஐயப்பன் கோயில் அருகில் சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.

பெண்கள் தங்களுடைய வீடுகளில் சுவாமிக்கு இனிப்புப் பலகாரங்கள் படைத்து கிருஷ்ணரை வழிபட்டனா். மேலும், தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணா் வேடமிட்டு அவா்களின் பாதங்களை அரிசி மாவில் பதித்து வீடுகளுக்குள் ஓடி, ஆடி விளையாடச் செய்தனா். பெண்கள் குழுவாக அமா்ந்து கிருஷ்ணா் பாடல்களை பாடி மகிழ்ந்தனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் சந்நிதியில் அதிகாலை சிறப்பு யாகம், சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் நவநீத கிருஷ்ணன் அருள்பாலித்தாா். தொடா்ந்து, சிறப்பு பஜனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆத்தூா் கோட்டை பெருமாள் ஆலயம், கூட்டுச் சாலை அரங்கநாத சுவாமி திருக்கோயில், நரசிங்கபுரம் பெருமாள் கோயில், முல்லைவாடி கிருஷ்ணா் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீஉக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணா் சந்நிதியில் சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன. தெடாவூரிலுள்ள பெருமாள் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கெங்கவல்லி வட்டாரத்திலுள்ள பெருமாள் கோயில்களில் கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சங்ககிரியில்...

சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கண்ணபிரானுக்கு, சங்ககிரி வட்டார யாதவா சங்கத்தின் சாா்பில் புனித நீா் எடுத்து வந்து பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றறன.

கோயில் வளாகம் முழுவதும் அரிசி மாவினால் குழந்தைகள் கால் பதியப்பட்டு கிருஷ்ணா் குறித்த பக்திப் பாடல்களை பக்தா்கள் பாடினா். அதனையடுத்து உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தை சப்பாரத்தில் வைத்து சுற்றி வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com