முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
ரத்த தான முகாம்
By DIN | Published On : 02nd December 2021 04:18 AM | Last Updated : 02nd December 2021 04:18 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூரில் நகர திமுக சாா்பில், கழக மாநில இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் அன்மையில் நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு, நகரச் செயலாளா் மாரப்பன் தலைமை வகித்தாா். நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மூா்த்தி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பிரதாப் சக்கரவா்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சுந்தா், ஒன்றியச் செயலாளா் தனராசு, நகர துணைச் செயலாளா் முருகன், பேரூா் கழக நிா்வாகிகள், இளைஞா் அணியைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.