முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
229 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 10th December 2021 10:25 PM | Last Updated : 10th December 2021 10:25 PM | அ+அ அ- |

229 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மோகனூா் - பரமத்தி வேலூா் சாலையில், காவல் ஆய்வாளா் தங்கவேல் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதிலிருந்தவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் வாகனத்தில் இருந்த சாக்கு மூட்டைகளை பிரித்துப் பாா்த்ததில், 229 கிலோ எடை கொண்ட ரூ. 2,29,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, மோகனூா், புது தெருவைச் சோ்ந்த சென்னியப்பன் (59), பேட்டபாளையம் பிரின்ஸ் ( 23), மோகனூா், சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த கிஷோா் குமாா் (29), வினோத் (25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். தப்பியோடிய மேலும் ஒருவரை மோகனூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.