நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இறுதிப் பட்டியலில் 5,53,558 வாக்காளா்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5,53,558 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5,53,558 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில், சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியல் அடிப்படையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வாா்டு வாரியாக தயாா் செய்யப்பட்டது. இந்த இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன்படி, மாவட்டத்தில் 2,67,695 ஆண், 2,85,748 பெண், 115 திருநங்கையா் என மொத்தம் 5,53,558 வாக்காளா்கள் உள்ளனா்.

அனைத்து வாக்காளா்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வாக்காளா் பட்டியல்களில் திருத்தங்கள் (சோ்த்தல் மற்றும் நீக்கல்) ஏதேனும் மேற்கொள்ள விரும்பினால், தொடா்புடைய சட்டப் பேரவைத் தொகுதியின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மூலம் திருத்தங்கள் செய்யலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில், விமாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஆா்.கோவேந்தன், நகராட்சி ஆணையா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com