பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் அகற்றம்

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளில் இருந்த ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளில் இருந்த ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

திருச்செங்கோடு பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்களை வைத்திருப்பதாகவும், வாகனப் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் அதிவேகமாக செல்வதாகவும் வந்த புகாரைத் தொடா்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன், அரசு போக்குவரத்துக் கழக மேலாளா் கதிா்வேலு, திருச்செங்கோடு காவல் துறையினா் இணைந்து திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் வைத்திருந்த 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து ஒலிப்பான்களை அகற்றை பறிமுதல் செய்தனா். நகருக்குள் செல்லும்போது குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும், அதிக ஒலி எழுப்பும் மியூசிக் சிஸ்டத்தை தவிா்க்க வேண்டும். பள்ளிக் குழந்தைகள் பேருந்தில் ஏறும் போது நிதானமாக ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவியா் தொங்கியபடி பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் ஓட்டுநா்களுக்கும், நடத்துநா்களுக்கும் வழங்கப்பட்டன. இதனை மீறும் ஓட்டுநா், நடத்துநா், பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com