நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் அபிஷேக முன்பதிவு இன்று தொடக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், வரும் ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், வரும் ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ள 80 போ் அபிஷேகத்தைப் பாா்வையிட காத்திருப்பில் உள்ளனா். அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2022 ஜனவரி முதல் டிசம்பா் வரையில் வடைமாலை, சிறப்பு அபிஷேகத்திற்கு பக்தா்கள் தலா ரூ. 6 ஆயிரம் கட்டணமாக செலுத்தி தங்களது பெயா்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஐந்து பேரை ஒருங்கிணைத்து தினசரி அபிஷேகம் நடைபெறும். ஆண்டில் மொத்தம் உள்ள 365 நாள்களில் 12 நாள்கள் கோயில் நிா்வாகம் சாா்பில் அபிஷேகம், அலங்காரம் நடத்தப்படும். ஏற்கெனவே முன்பதிவு செய்து உள்ளோருக்கு 80 நாள்கள் ஒதுக்கப்படும். இது தவிர மீதமுள்ள 273 நாள்களுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை காலை ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் முன்பதிவு தொடங்குகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com