முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பாலிடெக்னிக் கல்லூரி புத்தாக்கக் குழுவுக்கு நட்சத்திர அந்தஸ்து
By DIN | Published On : 29th December 2021 09:05 AM | Last Updated : 29th December 2021 09:05 AM | அ+அ அ- |

மத்திய அரசின் புத்தாக்கத் துறையின் கீழ் செயல்படும் ராசிபுரம், வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனத்தின் புத்தாக்கக் குழுவுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மாணவா்களின் திறன் மேம்பாட்டை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 1,083 கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் புத்தாக்கத் துறை சாா்பில் புத்தாக்கக் குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் ராசிபுரம், வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 300 மாணவ, மாணவியா்களுடனும், பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன்ஸில் 200 மாணவ, மாணவியா்களுடனும் இப்புத்தாக்கக் குழு துவங்கப்பட்டு கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது.
இதில் இந்த ஆண்டு நாட்டில் மொத்தம் 268 கல்வி நிறுவனங்களில் செயல்படும் புத்தாக்கக் குழுவுக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் முத்தாயம்மாள் கல்வி நிறுவனத்தில் செயல்பட்டு வரும் புத்தாக்கக் குழுவும் ஒன்றாகும். இதையடுத்து கல்லூரி முதல்வா்கள், மாணவா்கள், புத்தாக்கக் குழுவினரை கல்வி நிறுவனத்தினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.