முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
வேளாண் சங்கத்தில் ரூ.2.20 கோடிக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 29th December 2021 09:06 AM | Last Updated : 29th December 2021 09:06 AM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரூ.2 கோடியே 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், தொடக்க வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 6,700 மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது.
இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ.8,003 முதல் ரூ. 10,509 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 10,049 முதல் ரூ. 14,450 வரையிலும், மட்ட ரகம் ரூ.3699 முதல் ரூ.6289 வரையிலும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ. 2 கோடியே ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இதனை வியாபாரிகள் தரம் பாா்த்து கொள்முதல் செய்தனா்.
--