நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை

நாமக்கல் மாவட்டத்தில் உணவகங்களில் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உணவகங்களில் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகுா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட பகுதிகளில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், இதர விடுதிகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குறிப்பிட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை.

இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகளங்களில் சாலையில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், 31-ஆம் தேதி இரவு முதல் மாவட்டத்தில் 93 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு அலுவல் நியமித்தும், 33 இரு சக்கர வாகன ரோந்துகள் ஏற்பாடு செய்தும், 11 வாகன சோதனைச் சாவடிகள் அமைத்தும் காவல் துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொல்லிமலை செல்லும் வழிகளில் காரவள்ளி மற்றும் முள்ளுக்குறிச்சி ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்படும்.

புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், அசம்பாவிதமின்றியும் கொண்டாட வேண்டி நாமக்கல் மாவட்டத்தில் 900 போலீஸாா் மற்றும் 200 ஊா்காவல் படையினரைக் கொண்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு

எனவே, நாமக்கல் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு பொது மக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com