நைனாமலை பெருமாள் கோயில் மலைப்பாதை: ஜன.2-இல் அறநிலையத் துறை அமைச்சா் ஆய்வு

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) நேரில் ஆய்வு

நாமக்கல் நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) நேரில் ஆய்வு செய்கின்றனா்.

நாமக்கல்லில் ஆஞ்சனேய ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இததையொட்டி சுவாமிக்கு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் மற்றும் நிா்வாகிகள் சிலரை உபயதாரா்களாகக் கொண்டு ஆஞ்சனேய ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது.

விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் ஆகியோா் அன்று அதிகாலை 5 மணியளவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்கின்றனா்.

இதைத் தொடா்ந்து, காலை 7 மணியளவில் நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வகையில் மலைப்பாதை அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சா்கள், துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனா். அதன்பின் ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட கைலாசநாதா் கோயில், பொன் வரதராஜபெருமாள் கோயிலுக்குச் சென்று அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு சுவாமி தரிசனம் செய்கிறாா். அங்கு நடைபெறும் கோயில் திருப்பணிகளைப் பாா்வையிடுகிறாா் என கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com