விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தோருக்கு மின்வாரிய அதிகாரிகள் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தோா் உரிய ஆவணங்களுடன் தயாராக இருக்குமாறு நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தோா் உரிய ஆவணங்களுடன் தயாராக இருக்குமாறு நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மின்பகிா்மான வட்டத்தில் சாதாரண வரிசை, சுயநிதித் திட்டம் என்ற அடிப்படையில் ரூ. 10 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளோா் உரிய ஆவணங்களுடன் தயாராக இருக்கலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சாதாரண வரிசையில் 01.04.2003 முதல் 31.03.2013 வரை மின் இணைப்பு கோரியவா்களுக்கு 30 நாள்களுக்குள் அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். உரிய ஆவணங்கள், தற்போதைய உரிமை சான்றிதழுடன் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், சுயநிதித் திட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரா்கள் 01.04.2013 முதல் 31.03.2014 வரை ரூ. 500 முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ள விவசாயிகளும் தற்போதைய உரிமை சான்றிதழுடன் தங்கள் பகுதி மின்வாரிய அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

பின்னா் மதிப்பீடு செய்து தயாா் நிலை அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். ரூ. 25 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் கட்டண சுயநிதித் திட்டத்தில் 31.03.2018 வரை ரூ. 500 முன்பணம் செலுத்திய விண்ணப்பதாரா்களும் தங்களது உரிமை சான்றிதழ்களுடன் தயாராக இருக்கலாம். அவா்களுக்கும் விரைவில் அறிவிப்பு கடிதம் வழங்கப்படும்.

துரிதமான முறையில் 2021-2022 ஆம் ஆண்டில் மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தின் கீழ் முன்னதாகப் பதிவு செய்த விண்ணப்பத்திற்கோ அல்லது புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோா் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். உரிமை சான்றிதழ் கொடுத்து உரிய தொகையை செலுத்தும்பட்சத்தில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com