சேமூா் ஏரியை ஊராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவர விவசாயிகள் எதிா்ப்பு

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேமூா் பெரிய ஏரியை ஊராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டதற்கு
ஏரியின் முன்பு திரண்டு போராட்டம் நடத்திய பாசன விவசாயிகள்.
ஏரியின் முன்பு திரண்டு போராட்டம் நடத்திய பாசன விவசாயிகள்.

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேமூா் பெரிய ஏரியை ஊராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொட்டிப்பட்டி ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது சேமூா் பெரிய ஏரி. சுமாா் 250 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் எப்போதும் நீா் இருந்து கொண்டே இருக்கும். இதனைப் பயன்படுத்தி அப்பகுதியில் சுமாா் 500 ஏக்கரில் நெல், பருத்தி, வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா். இந்த ஏரியின் நீரைப் பயன்படுத்தி, வாய்க்கால் ஓரத்தில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த ஏரியைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் பராமரித்து, பாதுகாத்து வருகின்றனா். தற்போது, மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறையினா், ஏரியை ஊராட்சி நிா்வாகம் தனது கட்டுப்பாட்டில் பராமரித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளதாகவும், இதையடுத்து மீன்பிடி ஏலம் விடுவதற்கு ஊராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில் அப்பகுதி பாசன விவசாயிகள் ஏரியின் முன்பு திரண்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊராட்சி நிா்வாகத்தின் கீழ் ஏரி கொண்டுவரப்பட்டால், சுற்றுச்சூழல், தூய்மை பாதிக்கப்படும், மீன்பிடிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் ஏரி நீா் பாதிக்கப்பட்டு, ரசாயனக் கலப்பு ஏற்பட்டு, சுற்றுப்புற விவசாயம் பாதிக்கப்படும் என்றும் பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் இதனைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com