மாரியம்மன் கோயில் திருவிழா

கபிலா்மலை அருகே மந்த மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கபிலா்மலை அருகே மந்த மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள சாமிநாதபுரத்தில் மந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்மனுக்கு பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 30, 31 ஆம் தேதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. திங்கள்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை கோயில் வளாகத்தில் மாவிளக்கு பூஜையும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது. புதன்கிழமை காலை கிடா வெட்டுதல், மாலையில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி, இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மந்த மாரியம்மன் கோயில் விழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com