மின்சார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th February 2021 08:05 AM | Last Updated : 04th February 2021 08:05 AM | அ+அ அ- |

நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
மின்சார சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச மாவட்டச் செயலாளா் ஆா்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளா் கே.சிவராஜ், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.தனசேகரன் முன்னிலை வகித்தனா்.
இதில், பொதுத் துறை வங்கிகள், ரயில்வே துறை, காப்பீட்டு நிறுவனங்கள், மின்சாரம், போக்குவரத்து, துறைமுகம், சாலை பராமரிப்பு, மருத்துவம், கல்வி, ராணுவ தளவாடத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
அனைத்து உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மக்களை பாதிக்கும் வகையிலான அம்சங்களை நீக்க வேண்டும். மின்சார சட்டம் 2020-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.