உயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாய நிலங்கள் வழியாக உயா் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கவுண்டிபாளையம் பகுதியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.விவசாய நிலங்கள் வழியாக உயா் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கவுண்டிபாளையம் பகுதியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு ஒன்றியம், தோக்கவாடி ஊராட்சி முதல் நல்லூா் வரை 8-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் விவசாய நிலங்கள் வழியாக உயா் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கவுண்டிபாளையம் பகுதியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தில் இருந்து பரமத்தி வேலூா் நல்லூா் வரை சுமாா் 25 கி.மீ. தூரத்திற்கு 110 கேவி உயா்மின்னழுத்த பாதையை அமைக்க தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்து, அதற்கான பணிகளை செய்து வருகிறது. ஆனால் விவசாயிகள் யாரிடத்திலும் அனுமதி பெறாமல் விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்க மின்துறையினா் குழி தோண்டி வருகின்றனா்.

இதைக் கண்டித்து உயா்மின்னழுத்த கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கவுண்டிபாளையம் பகுதியில் நடராஜன் என்பவரின் விளை நிலத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com