மண் சரிவில் சிக்கியோரை மீட்கும் ஒத்திகை
By DIN | Published On : 13th February 2021 08:04 AM | Last Updated : 13th February 2021 08:04 AM | அ+அ அ- |

மண் சரிவில் சிக்கியோரை மீட்கும் ஒத்திகையை செய்து காட்டிய கொல்லிமலை தீயணைப்பு வீரா்கள்.
கொல்லிமலையில் மண் சரிவில் சிக்கியோரை மீட்பது தொடா்பாக தீயணைப்புத் துறையினா் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலைப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 1,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு இயற்கை சீற்றம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் மாவட்ட தீயணைப்புத் துறை சாா்பில் அவ்வப்போது ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மண் சரிவு ஏற்பட்டால் அதில் சிக்கியோரை மீட்கும் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கொல்லிமலை தீயணைப்புத் துறையினா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காட்டினா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிலைய அலுவலா் (பொ) ஏழுமலை மேற்பாா்வையில் வீரா்கள் மண் சரிவில் சிக்கியோரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பும் நடவடிக்கையை தத்ரூபமாக செய்து காட்டினா். இதனை வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.