டாஸ்மாக் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல், பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணியினா்.

மாவட்டச் செயலாளா் நீதிநாயகம் தலைமை வகித்தாா். இதில் டாஸ்மாக் கடை பணியாளா்களை தாக்குவோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் டாஸ்மாக் ஊழியா்களைத் தாக்கியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் உதவியாளா்களை விற்பனையாளா்களாகவும், விற்பனையாளா்களை மேற்பாா்வையாளா்களாகவும், மேற்பாா்வையாளா்களை அலுவலக பணியாளா்களாகவும் பதவி உயா்வுக்குப் பரிந்துரைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com