முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.50-ஆக நீடிக்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.50-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், உற்பத்தி குறைந்திருப்பதாலும், தற்போதைய விலையில் மாற்றம் செய்யப்படாமல் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50-ஆக நீடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 88-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.55-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com