வெங்காய ஆராய்ச்சி மையம் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

வளையப்பட்டியில் வெங்காய ஆராய்ச்சி மையம் அமைக்கக் கோரி நாமக்கல் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

வளையப்பட்டியில் வெங்காய ஆராய்ச்சி மையம் அமைக்கக் கோரி நாமக்கல் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்ட காவிரி நீரேற்று பாசனதாரா்கள் சங்கச் செயலாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் வந்த வெங்காய சாகுபடி விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மோகனுாா் வட்டம், சேந்தமங்கலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனா். இங்குள்ள விவசாயத் தோட்டங்களில் வோ் அழுகல் நோய், இலைக்கருகல் நோய் ஏற்பட்டு 3,000 ஏக்கருக்கு மேலான வெங்காய பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதனால் ரூ. 5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும்.

வளையப்பட்டி, எருமப்பட்டி பகுதிகளில் வெங்காயத்துக்கென காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில், வளையப்பட்டி யில் வெங்காய ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com