வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா் வெற்றிலை சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை உயா்வடைந்ததால் வெற்றிலை விவாசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பரமத்தி வேலூா் வெற்றிலை சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை உயா்வடைந்ததால் வெற்றிலை விவாசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 5,000க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 4,500 க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 2,500க்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிா் மாா் ரூ. 3,000க்கும் ஏலம் போனது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 7,000க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 5,700க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3,000க்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3,500 க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து குறைந்துள்ளதாலும், விசேஷ வைபவங்கள் தொடா்ந்து வருவதாலும் வெற்றிலை விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com