முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.30-ஆக சனிக்கிழமை விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.30-ஆக சனிக்கிழமை விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கேரளத்தில் முட்டை விற்பனை குறைந்து வருவதோடு திருவிழாக் காலமாக இருப்பதால் விலையில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முடிவில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.30-ஆக நிா்ணயிப்பது எனவும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தீா்மானிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 55-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com