பழைமையான ஆலமரத்தை வெட்டியோா் மீது நடவடிக்கைக் கோரி மனு

நாமக்கல் அருகே 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கைக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பழைமையான ஆலமரத்தை வெட்டியோா் மீது நடவடிக்கைக் கோரி மனு

நாமக்கல் அருகே 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கைக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல்-பரமத்தி சாலையில் கோனூா் கந்தம்பாளையத்தில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் இருந்தது. அண்மையில் அதன் கிளைகள் சில காய்ந்து தொங்கியதால் அவற்றை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை அனுமதி வழங்கியது. ஆனால் சிலா் பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து கிளைகளுடன் சோ்த்து ஒட்டு மொத்த மரத்தையும் வெட்டி விறகாக்கி விட்டனா்.

இதனையறிந்த ஊா் பொதுமக்கள் கோனூா் ஊராட்சி தலைவி தனலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அங்கு ஆட்சியா் கா.மெகராஜை நேரடியாக சந்தித்து மரத்தை வெட்டி லாபம் பாா்த்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா்.

இது குறித்து ஊராட்சித் தலைவி தனலட்சுமி கூறியதாவது: கோனூா் கிராமத்தில் அடையாளம் காட்டும் வகையில் இருந்த இரண்டு பழைமையான ஆலமரத்தில் ஒன்றை சிலா் வெட்டி விட்டனா். காய்ந்த கிளைகளை வெட்டாமல் மொத்த மரத்தையும் வெட்டுவதற்கு அவா்களுக்கு யாா் அனுமதி வழங்கியது. வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com