முடிதிருத்தும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மருத்துவா் சமூக சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளா்கள்.

மாவட்ட தலைவா் பி.மாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.வேலுமணி, பொருளாளா் என்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மிகவும் பிற்பட்டோா் பிரிவில் மருத்துவா் சமூகத்துக்காக தனி உள் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான முடிதிருத்துவோா், மருத்துவா் சமூகத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com