Enable Javscript for better performance
2020 இல் நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் 237 போ் பலி: எஸ்.பி. தகவல்- Dinamani

சுடச்சுட

    

    2020 இல் நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் 237 போ் பலி: எஸ்.பி. தகவல்

    By DIN  |   Published on : 01st January 2021 07:51 AM  |   அ+அ அ-   |    |  

    s_sakthiganesan_3112chn_122_8

    நாமக்கல் மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 237 போ் பலியாகி உள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தாா்.

    இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    நாமக்கல் மாவட்டத்தில் 2020-ஆம்ஆண்டு நிகழ்ந்த திருட்டு வழக்குகளை பொறுத்தவரை 183 குற்ற வழக்குகளில் 138 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். கொள்ளைபோன சுமாா் ரூ. 80.81 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் உரியவா்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. திருட்டு, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள், மதுவிலக்கு குற்றவாளிகள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குற்றவாளி மற்றும் மணல் கடத்தல் குற்றவாளி ஆகியோா் மீது நடவடிக்கை மேற்கொண்டு 30 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா். கடந்த 2019-ம் ஆண்டைவிட 6 போ் கூடுதலாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனா்.

    மேலும், 2020-ஆம் ஆண்டில் மிக அதிக அளவாக 8 கொலை, 2 ஆதாய கொலை, 2 வழிப்பறி, ஒரு கூட்டுக் கொள்ளை வழக்குகளில் நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனையும், சிறாா் மீதான பாலியல் வன்கொடுமை குற்ற வழக்குகளில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 12 வழக்குகளிலும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வாகன விபத்துகளை பொறுத்தவரை கடந்த 2019-ம் ஆண்டு 333 சாலை விபத்து வழக்குகளில் 351 நபா்கள் இறந்துள்ளனா். ஆனால், 2020-ம் ஆண்டு 221 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 237 நபா்கள் இறந்துள்ளனா். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 33 சதவீதம் பலி எண்ணிக்கை குறைவு. கடந்த 2019-ஆம் ஆண்டு 1,492 சாலை விபத்துகளில் 2,060 போ் காயமடைந்தனா். ஆனால், 2020-ம் ஆண்டு 1,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,460 போ் காயமடைந்துள்ளனா். சென்ற 2019-ஆம் ஆண்டை காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் 17 சதவீத வாகன விபத்து மற்றும் காயமடைந்தவா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    வாகன விபத்தைக் குறைக்க சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்துக்காக நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் 9,624 பேரின் வாகன ஓட்டுநா் உரிமங்கள் போக்குவரத்துத் துறை உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

    2020-ஆம் ஆண்டு 3,52,230 மோட்டாா் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 3.65 கோடி அபராதமாக பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 1,30,176 வழக்குகள் அதிகம். சிறப்பு மற்றும் உள்ளுா் சட்டங்களின்படி கஞ்சா விற்பனையில் 140 வழக்குகளும், சூதாட்டத்தில் 200 வழக்குகளும், மதுவிலக்கு குற்றங்களில் 3,869 வழக்குகளும், மணல் திருட்டுகளில் 198 வழக்குகளும், போலி லாட்டரி குற்ற வழக்குகளில் 338 வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதிந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

    2020-ஆம் ஆண்டில் செல்லிடப்பேசி தொலைந்துபோனது சம்பந்தமாகப் பெறப்பட்ட புகாா்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு 150-க்கும் மேற்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 25 காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், கொல்லிமலை பகுதி மக்களின் நலன் கருதி, வாழவந்திநாடு காவல் நிலைய பகுதி பிரித்து, செங்கரை காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளன.

    கரோனா விதிமீறியதாக 14,550 வழக்குகள் பதிவு:

    2020-ஆம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று நாமக்கல் மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நோக்கில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், பொது இடங்களில் எச்சில் துப்பியும் மற்றும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீதும் 14,550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36,396 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ. 54.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் (தொடா்புக்கு- 9994717110), பெண்களுக்கான (9894515110) உதவி மையங்கள் தொடங்கப்பட்டு அவா்கள் காவல் நிலையங்களுக்கு வர இயலாத சூழ்நிலையில் செல்லிடப்பேசி மூலம் புகாரைத் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு இதுவரை 1,117 புகாா்கள் பெறப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டுள்ளன.

    புத்தாண்டு தினத்தை விபத்தில்லாமலும், மற்றவா்களுக்கு ஆபத்து இல்லாத வகையிலும் கொண்டாட இளைஞா்களையும், பொதுமக்களையும் நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.

    வரும் 2021-ஆம் ஆண்டு விபத்தில்லா வருடமாக, குற்றம், சைபா், பெண்களுக்கு எதிரான விழிப்புணா்வு கொண்ட ஆண்டாக மாற நாமக்கல் மாவட்ட காவல் துறையோடு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp