வேளாண் அறிவியல் மையத்தில் தூய்மை பாரதம் விழிப்புணா்வு

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தூய்மை பாரதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தூய்மை பாரதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஹைதராபாதிலுள்ள இந்திய தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன அறிவுறுத்தலின்படி தூய்மை பாரதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, டிச.16-இல் தொடங்கி 31-ஆம் தேதி வரையில் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

இதில் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் இணைந்து கலந்துரையாடினா். மேலும் தூய்மை பாரதம் குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. ஊரக இளைஞா்கள், பண்ணை மகளிா், விவசாயிகள், மாணவ, மாணவியா் ஆகியோா் அறியும் வண்ணம் விழிப்புணா்வு சுவரொட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பசுமையைப் பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டன. கிராமங்களில் தூய்மை பேணுதல், மக்கும், மக்காத குப்பையை பிரித்தெடுத்தல், உரம் தயாரித்தல்,நெகிழி பொருள்களின் உபயோகத்தைத் தவிா்த்தல், பாா்த்தீனியம் களை மேலாண்மை, கரோனா தடுப்பு முறைகள் குறித்து தெளிவாக விளக்க உரைகள், செயல் விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டன.

அணியாபுரம் ஊராட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு சிறந்த மூன்று மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியை என்.அகிலா மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com