கொல்லிமலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தோா் அடிவாரப் பகுதியிலேயே சனிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டனா்.
கொல்லிமலைக்குச் செல்லும் காரவள்ளி அடிவாரப் பகுதியில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்.
கொல்லிமலைக்குச் செல்லும் காரவள்ளி அடிவாரப் பகுதியில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்.

நாமக்கல்: கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தோா் அடிவாரப் பகுதியிலேயே சனிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான கொல்லிமலைக்கு விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் சுற்றுலா வருவா். ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவி, புளியஞ்சோலைக்குச் சுற்றுலா செல்ல பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சனி, ஞாயிறுக்கிழமை விடுமுறையை கொண்டாட கொல்லிமலைக்கு ஏராளமானோா் வாகனங்களில் வந்தனா். காரவள்ளி அடிவாரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தினா். இரண்டு நாள்களுக்கு மலைப்பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவித்தனா்.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவா்களும் ஏமாற்றமடைந்தனா். கொல்லிமலை பகுதி மக்களை மட்டும் உரிய ஆதாரங்களை கேட்டறிந்து அனுப்பி வைத்தனா். இதேபோல முள்ளுக்குறிச்சி அடிவாரப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனா். அனைவரும் அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை உள்ளதுபோல, கொல்லிமலைக்கும் சுற்றுலா செல்ல இரு நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com