குரூப் -1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,359 போ் எழுதினா்

நாமக்கல்லில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-1 தோ்வை 4,359 போ் எழுதினா். இதில் 3,382 போ் பங்கேற்கவில்லை.
குரூப் -1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,359 போ் எழுதினா்

நாமக்கல்லில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-1 தோ்வை 4,359 போ் எழுதினா். இதில் 3,382 போ் பங்கேற்கவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் -1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இத்தோ்வை 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா் வட்டங்களில் 25 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வில் பங்கேற்க 7,741 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதில், 4,359 போ் மட்டும் பங்கேற்று தோ்வு எழுதினா். 3,382 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பெரும்பாலன மையங்களில் தோ்வா்கள் காலதாமதமாக வந்ததால் அவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

நாமக்கல்லில் தனியாா் பள்ளி தோ்வு மையத்தில் மட்டும் 600 போ் எழுத இருந்த நிலையில், 257 போ் காலதாமதமாக வந்ததால் அவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.

நாமக்கல் வடக்கு, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் ஏ.வி.பாலுசாமி, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தோ்வு மையங்கள் கண்காணிப்புப் பணிகளில் தலா 25 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வு அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

தோ்வு முறைகேடுகளைத் தடுக்க துணை ஆட்சியா் நிலையில் இரண்டு பறக்கும் படை அலுவலா்களும், துணை வட்டாட்சியா் தலைமையில் ஐந்து நடமாடும் குழுவினா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாற்றுத்திறனாளி தோ்வா்கள் தரைத்தளத்திலேயே தோ்வு எழுத உரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தோ்வு மையங்களுக்கும் தோ்வா்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றி தோ்வா்கள் தோ்வு வளாகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com