கொல்லிமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு : எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

கொல்லிமலை வட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவைத் தொகுத உறுப்பினா் சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தாா்.
கொல்லிமலை ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கும் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.
கொல்லிமலை ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கும் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.

கொல்லிமலை வட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவைத் தொகுத உறுப்பினா் சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 5.23 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ரூ.135 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேந்தமங்கலம் தொகுதியில் 86 ஆயிரத்து 735 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.23 கோடி மதிப்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன், கொல்லிமலை வட்டத்திற்குள்பட்ட ஆரியூா் நாடு, வாழவந்திநாடு, தின்னனூா்நாடு, குண்டூா்நாடு, வளப்பூா்நாடு ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ரூ. 2,500 ரொக்கப் பணத்தையும், பொங்கலுக்கான கரும்பு, அரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை உள்ளிட்ட தொகுப்பையும் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவா் மாதேஸ்வரி, துணைத் தலைவா் கொங்கம்மாள், தெம்பளம் லேம்ப் கூட்டுறவு சங்கத் தலைவா் சி.சின்னதுரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com