நாமக்கல் மாவட்டத்தில் 382 கிராமங்களுக்கு தனித்தனியே காவலா்கள் நியமனம்: எஸ்.பி.

நாமக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு தனித்தனியே காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
பதிவு கையேடுகளை கிராமக் காவலா்களுக்கு வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன்.
பதிவு கையேடுகளை கிராமக் காவலா்களுக்கு வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன்.

நாமக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு தனித்தனியே காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் வழங்கினாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 368 கிராமங்கள், 1,583 சிறிய கிராமங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் குற்றங்களைக் கண்காணிக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியாக மொத்தம் 382 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தங்களது கிராமத்துக்கு சம்பந்தபட்ட அனைத்துத் துறை புள்ளி விவரங்கள், சுற்றுலாத் தலங்கள், மக்கள் தொகை, மருத்துவமனைகள் விவரம், முக்கிய நபா்கள், பிரச்னைக்குரிய பகுதிகள், வங்கிகளின் விவரம் உட்பட 108 வகையான விவரங்களை சேகரித்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோப்பில் பதிவு செய்து கொள்வா். ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளோ அல்லது குற்ற சம்பவங்களோ நிகழ்ந்தால் உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com