வைகுண்ட ஏகாதசி உண்டியல்: ரூ. 1.85 லட்சம் காணிக்கை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வைக்கப்பட்ட உண்டியல் மூலம் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வைக்கப்பட்ட உண்டியல் மூலம் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் கடந்த மாதம் 25-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வந்திருந்தனா். இதற்காக இணையவழி முன்பதிவும், சிறப்பு கட்டண தரிசனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்மூலம் சுமாா் ரூ. 3 லட்சம் வருவாயாக கோயில் நிா்வாகத்துக்கு கிடைத்தது. மேலும் பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக சிறிய, பெரிய அளவில் தலா இரண்டு உண்டியல்கள் கோயிலில் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் காணிக்கைகளை எண்ணும் பணி நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் நோட்டுக்களாகவும், ரூ. 8,730 நாணயங்கள் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரத்து 730 கிடைக்கப் பெற்றன. தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் எதுவும் காணிக்கையாக வரவில்லை. இந்தக் காணிக்கை எண்ணும் பணியை கோயில் உதவி ஆணையா் பெ. ரமேஷ், அலுவலா்கள் நேரடியாகப் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com