
நாமக்கல் இந்து சமய பேரவை சாா்பில் கூடாரவல்லி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்பேரவையின் 50-ஆம் ஆண்டு விழா மற்றும் கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாா், கருடாழ்வாா் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை, சங்கல்பம் நடைபெற்றன. பிற்பகல் 4:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். இதேபோல் நாமக்கல் முதலைப்பட்டியில் அமைந்துள்ள பங்காரு பெருமாள் கோயிலில் அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பங்காரு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.