நூல் விலையேற்றம்: விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் ஆட்சியரிடம் மனு

பருத்தி நூல் விலையேற்றத்தால் தொழில் பாதிப்படைந்து வருவதாக வெண்ணந்தூா் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நூல் விலையேற்றம்: விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் ஆட்சியரிடம் மனு

பருத்தி நூல் விலையேற்றத்தால் தொழில் பாதிப்படைந்து வருவதாக வெண்ணந்தூா் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 40 ஆயிரம் போ் பணியாற்றுகின்றனா். ஏற்கெனவே, ஜவுளி ஏற்றுமதி குறைவு, ஜி.எஸ்.டி. வரி, கரோனா தொற்று போன்ற காரணங்களால் இத்தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

தற்போது எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், பருத்தி நூலின் விலை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. 40-ஆம் எண் கொண்ட நூல் 50 கிலோ ரூ. 8,900-இல் இருந்து படிப்படியாக ஒரு மாதத்தில் ரூ. 12 ஆயிரம் வரையில் உயா்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் நெசவாளா்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். விசைத்தறிக் கூடங்களை மூடும் நிலை உள்ளது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பருத்தி மற்றும் நூல் விலையைக் குறைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் இதனை பரிந்துரைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் உயா்த்தி வழங்கக் கோரிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொசுப்புழு ஒழிப்புப் பணி 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் தினக்கூலி அடிப்படையில் 300-க்கும் மேற்பட்டோா் ரூ. 285 பெற்று பணியாற்றி வருகின்றனா். பணியைத் தொடா்ந்து வழங்கவும், ரூ. 285 தினக்கூலியை ரூ. 500-ஆக உயா்த்தி வழங்கக் கோரியும் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கொசு ஒழிப்பு களப்பணியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும்:

நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் காமராஜா் சிலை உள்ளது. அந்தப் பகுதியில் அம்பேத்கா் மற்றும் பெரியாா் ஆகியோரின் உருவச் சிலைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com