விசைத்தறி தொழிலாளா்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் பொங்கல் போனஸ் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விசைத்தறி தொழிலாளா்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் பொங்கல் போனஸ் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து தொழில்சங்கத்தின் கூட்டமைப்பு சாா்பில் குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க நகரத் தலைவா் ஜெ.எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். ஏஐசிசிடியு தொழிற்சங்க மாநிலச் செயலாளா் சுப்பிரமணி, சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளா் அசோகன் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

ஏஐடியுசி நாமக்கல் மாவட்டத் தலைவா் மாணிக்கம், மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணி, சிஐடியு நகரச் செயலாளா் பாலுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசைத்தறிகளில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், விசைத்தறி உரிமையாளா்கள் தரப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தரப்பட்ட 8 சதவீதம் மட்டுமே போனஸ் தரமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com