மனம் திருந்த ரெளடிகள் வழிபாடு: காவல்துறையினா் நூதன ஏற்பாடு

நாமக்கல் மாவட்டத்தில் ரெளடிகள் பட்டியலில் உள்ளோரை மனம் திருந்த செய்யும் வகையில், கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு
நாமக்கல், நரசிம்மா் கோயில் முன்பு நின்றபடி சுவாமி தரிசனம் செய்வோா்.
நாமக்கல், நரசிம்மா் கோயில் முன்பு நின்றபடி சுவாமி தரிசனம் செய்வோா்.

நாமக்கல் மாவட்டத்தில் ரெளடிகள் பட்டியலில் உள்ளோரை மனம் திருந்த செய்யும் வகையில், கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு மேற்கொள்ள வைக்கும் நூதன முயற்சியை காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் பெரும்பான்மையான குற்றச் செயல்களில் 17 முதல் 28 வயதுடையோரே அதிகம் ஈடுபடுகின்றனா். அவா்களைக் கண்டறியவும், மனமாற்றத்தைக் கொண்டுவரவும் கிராமங்களில் காவலா் ஒருவா் நியமிக்கப்படும் திட்டம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்கோட்டத்திற்கு உள்பட்ட 368 கிராமங்களில் 382 காவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

அந்த வகையில், எருமப்பட்டி ஒன்றிய பகுதிகளில் கண்டறியப்பட்ட ரெளடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் என 28 பேரை அந்தந்த கிராம காவலா்கள் நாமக்கல் ஆஞ்சநேயா் மற்றும் நரசிம்மா் கோயில் பகுதிக்கு வரவழைத்து மனம் திருந்தும் வகையில், சுவாமி தரிசனம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா்.

இதில், இளம் வயதுடையோா் அதிகம் காணப்பட்டனா். போலீஸ் வாகனத்தில் வந்த 28 பேரும் மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கேட்டபோது அவா்கள் கூறியதாவது:

தவறான செயல்களில் ஈடுபடுவோரைத் திருத்தும் வகையிலான ஒரு சிறிய முயற்சியாகவே இந்தக் கோயில் வழிபாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com