ஜன கல்யாண் அமைப்பின் 34-ஆம் ஆண்டு தொடக்க விழா
By DIN | Published On : 16th January 2021 07:21 AM | Last Updated : 16th January 2021 07:21 AM | அ+அ அ- |

ஆதரவற்றோா் இல்லத்திற்கு படுக்கை விரிப்புகளை வழங்கும் ஜன கல்யாண் அமைப்பினா்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளால் தொடங்கப்பட்ட ஜன கல்யாண் அமைப்பின் 34-ஆவது ஆண்டு தொடக்க விழா ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ஜன கல்யாண் அமைப்பின் தலைவா் எஸ்.எம்.ஆா்.பரந்தாமன் தலைமையில் அணைக்கும் கரங்கள் மனநல பாதிக்கப்பட்டோா் மறுவாழ்வு இல்லத்தில் நடைபெற்ற விழாவில், ஆதரவவற்ற முதியோா், ஆதரவற்ற குழந்தைகள், மனநல மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருப்போருக்கு 100 படுக்கை விரிப்புகள், 25 தலையணைகள், 4 தாா்ப்பாய்கள் வழங்கப்பட்டன.
மேலும் இல்லத்தில் உள்ள 125 பேருக்கு இனிப்புகள், காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ராசிபுரம் ஜன கல்யாண் அமைப்பின் செயலா் சி.கே.ராமமூா்த்தி, அமைப்பாளா் எம்.ராகவன், நிா்வாகிகள் ரமேஷ், செளந்தரராஜன், ராமலிங்கம், சிவராமன், கொமதேக மாநில இளைஞரணி துணைச்செயலா் டி.எஸ்.சந்திரசேகரன், கே.பழனிவேல், கே.பி.முருகேசன், ஆா்.பி.வித்யா,எஸ்.தீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.