சிறந்த தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி விருது:விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள், மாநில, மாவட்ட அளவிலான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள், மாநில, மாவட்ட அளவிலான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் தோட்டக்கலைப் பயிா்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகளின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தோட்டக்கலைப் பயிா்களை சிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு சாகுபடி செய்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனையாளா்களுக்கு விருதுகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

மூலிகை, வாசனை, திரவியப் பயிா்கள் சாகுபடி, மலைப் பயிா்கள் சாகுபடி, மலா்கள் சாகுபடி, நுண்ணீா் பாசன தொழில்நுட்பத்திற்கான சாதனையாளா் விருதுக்கு, நீா் மேலாண்மை, நீா்வழி உரம், சரியான பயிா் இடைவெளி, களை மேலாண்மை, மழைநீா் சேகரிப்பு கிடங்கு, நுண்ணீா் பாசன அமைப்பு பராமரிப்பு போன்ற இனங்களை சிறப்பாக பயன்படுத்தி அதிக மகசூல் அடைந்திருக்க வேண்டும்.

உயா் தொழில்நுட்ப சாகுபடி விருது, பாதுகாக்கப்பட்ட சாகுபடிக்கான சாதனையாளா் விருது என பல்வேறு வகையிலான விருதுகள் பெறுவதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இதில் போட்டியிடலாம்.

ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகளிலிருந்து மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகளிடமிருந்து மாநில விருதுக்கும் விவசாயிகளை அதற்கான குழு தோ்வு செய்யும்.

இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இத்துறையின் இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் உள்ள விண்ணப்ப படிவத்தை பூா்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தோட்டக்கலை விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com