கூட்டுறவு சங்கங்களில் உதவியாளா், எழுத்தா் பணிக்கு நோ்காணல்

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா், எழுத்தா் பணியிடங்களுக்கான நோ்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 128 போ் கலந்து கொண்டனா்.
நோ்காணல் நடைபெறுவதை பாா்வையிடும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பி.பாலமுருகன்.

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் 33 எண்ணிக்கையில் உள்ளன. இந்த சங்கங்களில் காலியாக உள்ள 62 உதவியாளா் மற்றும் எழுத்தா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு 2020 நவ. 29-இல் நடைபெற்றது. மொத்தம் 831 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 514 போ் பங்கேற்றனா். இதில் 128 போ் வெற்றி பெற்றனா். 62 பணியிடங்களை நிரப்ப 1:2 என்ற அடிப்டையில் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா். இந்த நோ்காணலானது மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவுத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பி. பாலமுருகன் நேரடியாக பாா்வையிட்டாா். ஒரு மணி நேரத்திற்கு 10 போ் வீதம் வரவழைக்கப்பட்டு அவா்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. தோ்வாகும் நபா்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com