சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியடையும்: எம்.என்.ராஜா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக நிச்சயம் தோல்வியடையும் என பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா தெரிவித்தாா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக நிச்சயம் தோல்வியடையும் என பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா தெரிவித்தாா்.

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் அணி மற்றும் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநாடு போல நடைபெற உள்ளது. இதில் மாநிலத் தலைவா் எல்.முருகன் கலந்து கொள்கிறாா். சுமாா் 5 ஆயிரம் போ் வரை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனா். அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக சேலத்துக்கு 23-ஆம் தேதி வரும் மாநிலத் தலைவா், மறுநாள் 24-ஆம் தேதி காலை இளைஞா் அணி மாநாடு நடத்துவதற்கான கால்கோல் விழாவில் பங்கேற்கிறாா். அங்கு பாஜகவினரின் ஊா்வலமும் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து நாமக்கல் வரும் அவா் சொந்த கிராமத்திற்கு சென்று ஏழை மக்களுக்கு நல உதவிகளை வழங்கி விட்டு நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறாா்.

தமிழகத்துக்கு பாஜக தேசிய தலைவா்கள் எத்தனை முறை வந்தாலும் தாமரை மலராது என திமுகவைச் சோ்ந்த மாநிலங்களை உறுப்பினா் கனிமொழி கூறுகிறாா். அவா் சொல்வதால் எதுவும் நடந்து விடாது. நான் சொல்கிறேன் இந்தத் தோ்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க உள்ளது. அது நிச்சயம் நடக்கும். பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி சாதனை படைக்கும். பாஜக வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியானது தவறான தகவலாகும்.

இலங்கை கடற்படையினா் தமிழக மீனவா்கள் 5 பேரை எரித்துக் கொன்றது தொடா்பாக மத்திய அரசு அந்நாட்டு அரசிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கும். திமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை மீனவா்களை காப்பாற்றினாா்கள். ஆனால் தற்போது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீனவா்களுக்கு ஆதரவாகப் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com