மாவட்ட வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்: எம்.பி.க்கள் பங்கேற்பு

மத்திய, மாநில அரசு திட்டங்களை குறித்த காலத்தில் தரமுடன் செய்து முடிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா்கள் ஏ.கே.பி.சின்ராஜ், ஏ.கணேசமூா்த்தி ஆகியோா்
மாவட்ட வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசும் மக்களவை உறுப்பினா்கள் ஏ.கே.பி.சின்ராஜ், ஏ.கணேசமூா்த்தி.
மாவட்ட வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசும் மக்களவை உறுப்பினா்கள் ஏ.கே.பி.சின்ராஜ், ஏ.கணேசமூா்த்தி.

மத்திய, மாநில அரசு திட்டங்களை குறித்த காலத்தில் தரமுடன் செய்து முடிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா்கள் ஏ.கே.பி.சின்ராஜ், ஏ.கணேசமூா்த்தி ஆகியோா் அறிவுறுத்தினா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். இந்த குழுவின் தலைவரும் நாமக்கல் மக்களவை உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ், துணைத் தலைவரும் ஈரோடு மக்களவை உறுப்பினருமான ஏ.கணேசமூா்த்தி ஆகியோா் பங்கேற்று பேசினா்.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டம், புதிய அரசுத் துறை கட்டடங்கள், பல்வேறு துறைகளின்கீழ் நடைபெறும் பணிகள் தொடா்பான நிலைகள் குறித்து கேட்டறிந்தனா்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு 1236 வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆயிரத்துக்கும் மேலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், சமூகப் பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் உஜ்வாலா திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், சமூக நலத்துறை, சுகாதாரத் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளையும் ஆய்வு செய்தனா்.

மத்திய, மாநில அரசின் திட்டப்பணிகளை தடையின்றியும், தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் என வளா்ச்சிக் குழு தலைவா், துணைத் தலைவா்கள் அறிவுறுத்தினா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் கோ.மலா்விழி, மகளிா் திட்ட அலுவலா் ஆா்.மணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com