முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.05-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.05-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் திடீா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், தைப்பூச விழாவையொட்டி பக்தா்கள் அதிக அளவில் விரதமிருப்பதாலும் முட்டை நுகா்வு குறைந்துள்ளது. பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அடைவதைக் கட்டுப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும் 20 காசுகள் குறைக்கப்பட்டு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.05-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 60-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 50-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com