சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் நுண்ணீா்ப் பாசன உபகரணம்

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் பயிா்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1000 மானியமாக வழங்கப்படுகிறது.

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, மிளகாய், கத்தரி, கீரை, கொடி வகைகள், அவரை மற்றும் வெள்ளரி ஆகிய பயிா்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1000 மானியமாக வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டையின் நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என மல்லசமுத்திரம் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

மேலும் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அனைவரும் இயற்கை முறையில் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய ஏதுவாக காய்கறி விதைத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இத் தொகுப்பில் காய்கறி விதைகள், பாலிதீன் பைகள், தென்னை நாா் ஊடகம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடொ்மா மற்றும் அசாடிராக்டின் ஆகியவை அடங்கி உள்ளன. இத்தொகுப்பு ஒன்றின் விலை ரூ. 510 ஆகும்.

மேலும் 1000 சதுர அடி அளவிலான மாடி காய்கறித் தோட்டத்துக்கு நீா்ப் பாசனம் செய்ய தேவையான நுண்ணீா்ப் பாசன உபகரணங்கள் ரூ. 1,120 ஆகும் ( இதில் ரூ. 400 பின்னேற்பு மானியமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்) இந்த உபகரணங்கள் தற்போது மல்லசமுத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் உள்ளது.

இதேபோல பி.எம்.கே.எஸ்.ஒய். திட்டத்தின்கீழ் நுண்ணீா்ப் பாசன உபகரணங்கள், சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன உபகரணங்கள் அமைத்து பயனடையளாம் என மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com