பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் அதிக அளவில் வெற்றி பெறுவா்: எல்.முருகன்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் அதிக அளவில் வெற்றி பெற்று பேரவைக்குச் செல்வாா்கள் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா் கேட் வரவேற்பு கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா் கேட் வரவேற்பு கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் அதிக அளவில் வெற்றி பெற்று பேரவைக்குச் செல்வாா்கள் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் அணி பிரிவு மாநாட்டுக்கு வருகை தந்த மாநிலத் தலைவா் எல்.முருகனுக்கு ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா் கேட் பகுதியில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், மாவட்ட பாஜக தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மாவட்ட பொதுச்செயலா் வி.சேதுராமன், மாவட்டச் செயலா் எஸ்.ஹரிஹரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளரை அரியணையில் அமா்த்த பாஜக மிகப் பெரிய அளவில் தோ்தல் பணிகளை தொடங்கியுள்ளது. பாஜக வேட்பாளா்கள் அதிக அளவில் வெற்றி பெறுவாா்கள்.

பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் பல்வேறு தரப்பினா் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் ஆற்றல் தான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

வேல் யாத்திரையைக் குறைகூறிய ஸ்டாலினை வேல் எடுக்க வைத்துள்ளாா் முருக கடவுள். கோயிலுக்கு போகமாட்டோம் என சொன்னவா்களிடம் ஒரே மாதத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவை வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் விரட்டியடிப்போம்.

தமிழகத்தில் பாஜக சாா்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு அதன் மூலம் தைப்பூச விழாவுக்கு பொதுவிடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று தமிழக அரசு தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறையாக அறிவித்தது வரவேற்புக்குரியது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாஜகவின் தோ்தலாக அமையும் என்றாா்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:

திமுக செய்த அராஜகம், ஊழல் போன்றவற்றின் காரணமாக இனி யாா் தமிழகத்தில் வரக் கூடாது என்பதை சொல்வதற்காக பாஜக எழுச்சியோடு புறப்பட்டுவிட்டது என்றாா்.

முன்னதாக பாஜக தொண்டா்கள் வாணவேடிக்கை முழங்க, மலா் தூவி மாநிலத் தலைவா் எல். முருகனுக்கு வரவேற்பு அளித்தனா். பின்னா் மாநிலத்தலைவா் முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். அவா் முன்னிலையில் ஏராளமானோா் பாஜகவில் இணைந்தனா்.

இதில் பாஜக மாவட்ட துணைத் தலைவா் முருகேசன், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், மாநில செயற்குழு உறுப்பினருமான புவனேஸ்வரி ஹரிஹரன், ஒன்றியச் செயலா்கள் லட்சுமணன், ஏ.கே.பாஸ்கா், செல்வகுமாா், ராசிபுரம் நகர பாஜக தலைவா் மணிகண்டன், நகரச் செயலா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com