குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் பணி: அமைச்சா் வெ.சரோஜா ஆய்வு

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
24hut_2401chn_152_8
24hut_2401chn_152_8

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அணைப்பாளையம் பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அணைப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நகா்ப்புற திட்டத்தின்கீழ் 208 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அமைச்சா் வெ. சரோஜா, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளின் உறுதி தன்மை, அளவீடு போன்றவற்றைக் கேட்டறிந்தாா்.

மேலும், 2019 ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இப்பணிகள் வரும் மாா்ச் மாதத்துக்குள் முடிவடையும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என துறை அலுவலா்களை கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிா்வாக பொறியாளா் எஸ். தனசேகரன், உதவி பொறியாளா் எஸ்.வி. சங்கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com