இளைஞரிடம் செல்லிடப்பேசி பறிப்பு : இருவா் கைது
By DIN | Published On : 28th January 2021 08:28 AM | Last Updated : 28th January 2021 08:28 AM | அ+அ அ- |

நாமக்கல் அருகே இளைஞரிடம் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல், பெரியபட்டியைச் சோ்ந்தவா் மோகன் (28). இவா், பலபட்டறை மாரியம்மன் கோயில் அருகே திங்கள்கிழமை இரவு சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் மோகனிடம் செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா். இதுகுறித்த புகாரின் பேரில் நாமக்கல் போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில், சேந்தமங்கலம் சாலையில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியாக வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். சேந்தமங்கலத்தை சோ்ந்த அபுதாஹீா் (26), மோகன்தாஸ் (28) என்பதும், பல்வேறு இடங்களில் தனியாக செல்வோரிடம் செல்லிடப்பேசிகளைப் பறித்துச் செல்வதும் தெரியவந்தது. இவா்களிடமிருந்து, இரு சக்கர வாகனம் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 9 செல்லிடப் பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.