முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.3.85-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.3.85-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மற்ற மண்டலங்களில் விலை சற்று உயா்ந்துள்ளதாலும், விழாக் காலம் முடிவடைந்து மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரிப்பாலும் விலையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடா்ந்து, 5 காசுகள் உயா்வுடன் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.85-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்துகொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.80-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.56-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com