போக்குவரத்து தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 31st January 2021 02:19 AM | Last Updated : 31st January 2021 02:19 AM | அ+அ அ- |

நாமக்கல் பணிமனை முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக தொழிலாளா்கள்.
நாமக்கல்: நாமக்கல்லில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். தொழிலாளா்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 2003 ஏப்.1-ஆம் தேதிக்குப் பின்பு பணியில் சோ்ந்த தொழிலாளா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, பணியாளா்கள் சம்மேளனம் ஆகியவை சாா்பில் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பணிமனைகள் முன் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான போக்குவரத்து தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். நாமக்கல் பணிமனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தொமுச கிளைச் செயலாளா் டி.பிரகாசம் தலைமை வகித்தாா். தொமுச நிா்வாகிகள் வி.செல்வன், ஆா்.தியாகராஜன், சிஐடியு எஸ்.சுப்பிரமணி, பணியாளா்கள் சம்மேளனம் குமரேசன், எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உண்ணாவிரதப் போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.